இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அவர் அப்போது நாட்டில் கொரோனா நோய்ப்பரவல் காரணமாக முழு உலகமும் போராடிவரும் வேளையில் பல நெருக்கடிகளை இது உருவாக்கியுள்ளது. ஆனாலும் நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள சாவல்களை எதிர்த்து போராடுகிறோம்.
வெள்ளம், வெட்டுக்கிளிகள், எண்ணெய் வயல்களில் தீ, பூகம்பங்கள் மற்றும் நாட்டின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் சூறாவளிகள் என இன்னும் பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
நாம் எல்லாவற்றையும் ஒரு வாய்ப்பாக மாற்றி அதை ஒரு திருப்புமுனையாக மாற்ற வேண்டும். கொரோனா எங்களுக்கு தன்னம்பிக்கையை கற்றுத்தர வாய்ப்பளித்துள்ளது. நாம் பலமாகவும் தீர்மானமாகவும் இருக்க வேண்டும். அதுவே பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.