மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (10) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில,மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.
எதிர்வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி திருவிழா நடைபெறும் நிலையில் முன் ஏற்பாடுகள், சுகாதார நடவடிக்கைகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெறவுள்ள அடி மாத திருவிழாவின் போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளதோடு, சுகாதார நடை முறைகளை பேணி திருவிழா நடைபெறும் எனவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது