புகையிரத துறையின் வேண்டுகோளின் பேரில் காங்கேசந்துறை புகையிரத நிலையத்தில் கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது.
கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க (Chemical, Biological, Radiological and Nuclear) மற்றும் அணுசக்தி அவசரகால பதிலளிப்பு பிரிவு இந்த பணிக்கு நியமிக்கப்பட்டதுடன் குறிப்பாக பொது போக்குவரத்து சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த கிருமி நீக்கும் திட்டம் செயல்ப்படுத்தப்பட்டது.
வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த கிருமி நீக்கும் திட்டம் முறையான நடைமுறைகளுக்கு ஏற்ப காங்கேசந்துறை புகையிரத நிலையத்திலும், ரயில் வண்டிகளுக்கு உட்புறமும் மேற்கொள்ளப்பட்டது.