மறைந்த அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நீர்கொழும்பில் ஆத்ம சாந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்த நிகழ்வு நேற்றயத்தினம் நீர்கொழும்பு இந்து இளைஞர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் நீர்கொழும்பு வாழ் தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வை நீர்கொழும்பு தமிழ் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கான இரங்கல் உரையினை நீர்கொழும்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ குகேஸ்வர குருக்களும் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் திரு ஜெயராமன், மற்றும் அதன் பொருளாளர் திரு.ஏகாம்பரம் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா