முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் சிறைச்சாலைக்குள் குற்றவிசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணை.
வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பல்லான்சேனா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கொழும்பு குற்றவிசாரணை பிரிவு அதிகாரிகள் இன்றயதினம் (28) சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடாத்தினார்கள்.
கொழும்பு குற்றவிசாரணை பிரிவு அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் சென்றே விசாரணைகளை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தன அவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் கொரோன பரவுதல் சம்பந்தமாக ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கியனை தொடர்பாகவே விசாரணை செய்யப்பட்டதாக விசாரணைக்கு வந்த அதிகாரிகள்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா