ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ரயில், பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ரயில், பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

0Shares

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இ.போ.ச. பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் அனைத்து வழிகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு மட்டும் பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய ரயில் சேவைகளை ஒதுக்குவதற்கு நாளை புதன்கிழமை தொடக்கம் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments