நீர்கொழும்பு தளுபத்தை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் சந்தேக கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.
இன்று(09) அதிகாலை 1.50 மணியளவில் நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் 20ஆம் இலக்க சிறைக்கூடத்தினுள் அமைந்துள்ள மலசல கூடத்தில் கைதி(கைதி இலக்கம் 3638) ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த கைதியை அதிகாலை 2.58. மணிக்கு நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக அறிவித்த்துள்ளார்.
கொழும்பு10 கெத்தாராம பன்சலை வீதியை சேர்ந்த சம்சம் பசீர் சம்சம் சப்ராஸ் எனும் 22 வயது இளஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர் ஹெராயின் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மாளிகா வத்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மாளிகா கந்த நீதிமன்றத்தால் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 20 திகதி ஒத்திவைக்கப்பட்டு(வழக்கு இலக்கம் B11333/20) கடந்த 06 ஆம் திகதி நீர்கொழும்பு தளுபத்தை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் விளக்கமறியலில் வைக்க பட்டிருந்த நிலையில் குறித்த கைதி தனது காற்சட்டையை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தற்கொலை செய்துகொண்டவரின் சகோதரனும் குற்றசாட்டு ஒன்றுக்காய் குறித்த சிறைச்சாலையிலேயே அடைக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா