நீர்கொழும்பு பெரியமுள்ள பகுதியில் இன்றுகாலை மனித உரிமை செயற்பாட்டாளரும் , காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாந்துவின் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் ‘மெக்ஸ்’ (MAX) என்று அழைக்கப்படும் நாய் ஒன்றை சுட்டுகொன்றமை தொடர்பாக பெரியமுல்லை, சாந்த அந்தோனியார் வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கிளமன் பெர்னாடோ அவர்கள் சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இன்றுமாலை நீர்கொழும்பு பதில் நீதவான் பிரிமால் அமரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இரண்டு ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில், பிணையில் செல்வதற்கு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ் வழக்கு விசாரணை இம்மாதம் 18ஆம் திகதிவரை பதில் நீதவானால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.