இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும், இலங்கை மக்களின் தேவைகளுக்கும் உதவியளிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தேசிய ஆய்வகங்கள் மற்றும் நோயாளிகளை நிர்வாகிக்க கூடிய முறையை வலுப்படுத்துவதற்கான மருத்துவ உபகரணங்கள், சுகாதார பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தரவுகளை சேகரிக்க கூடிய தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், நாட்டில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பெண்கள் மற்றும் ஏனைய குடும்பங்களுடைய சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான சுகாதார உபகரணங்களையும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது