மே முதலாம் திகதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. உழைப்பாளரின் சக்தியை, ஒற்றுமையை ஓங்கியொலிக்க வேண்டிய இந்நாள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்ட அவல நிலையையே வெளிப்படுத்துகின்றது. இத்தினத்தின் நோக்கம் இன்று புறந்தள்ளப்பட்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளதும் ஆள்பலத்தை வெளிப்படுத்தும் தேசிய நாளாக அமைந்துவிட்டது என்றால் அதுவே யதார்த்தம். அதுவே உண்மை. பிள்ளையார் பிடிக்க குரங்கானது என்பது போல் தொழிலாளரின் உரிமை பற்றி குரல் கொடுக்க வேண்டிய மேதின ஊர்வலங்களும், கூட்டங்களும் இன்று அரசியல் ஊர்வலங்களாகவும் அரசியல் மேடைகளாகவும் மாறிவிட்டன.. ஆனால் இம்முறை மட்டும் ஒரு மாற்றம் கிடைக்கப் பெற்றுள்ளது அது corona வைரஸ் மூலமாக
ஜனநாயக நாடான நமது நாடுகளில் மேதினம் நடத்த, ஊர்வலம் செல்ல, கூட்டத்திற்கு ஆள்திரட்ட பண நாயகமும், மதுநாயகமும் உதவும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது. மேதினத்தின் நோக்கத்தையே, அதன் உண்மைத் தாற்பரியத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் நின்று ஒப்பாரி வைப்பது போன்றே இன்றைய காலத்தில் மேதினம் கொண்டாடப்படுகின்றது.
தொழிலாளர்களுக்காய் குரல் கொடுத்த மேதினம் இன்று அரசியலுக்காய் பயன்படுத்தப்படுகின்றதா எனும் என்னத்தில் நோக்கத்தோன்றுகின்றது
எனவே நாம் அனைவரும் ஒன்றினைந்து இன்றைய இரத்தம் சித்தி போராடிப்பெற்ற இந்த மே தினத்தினை தொழிலாளர்களின் எதிர்கால கனவுகளின் கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்தி பிரார்த்திப்போம்