அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வருவதற்கு ஒருவாரம் முன்பு, குடியரசுத்தலைவர், பிரதமர் மோடியின் தனிப்பட்ட மற்றும் அலுவலக டிவிட்டர் கணக்குகளை வெள்ளை மாளிகை பின்தொடரத் தொடங்கியது.
இந்த டிவிட்டர் கணக்குகளை பின்தொடர்வதை வெள்ளை மாளிகை தற்போது, நிறுத்தியுள்ளது. பொதுவாக வெள்ளை மாளிகை, அமெரிக்க அரசின் டிவிட்டர் கணக்குகளை மட்டுமே பின்தொடர்வது வழக்கம் என்றும், டிரம்பின் இந்திய வருகையை முன்னிட்டு, அந்த பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் டிவிட்டர் கணக்குகளை பின்தொடர்ந்தாகவும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்