னாவில் தோன்றி தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இதில் ஒவ்வொரு நாடுகளின் தொற்று பரவல் நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் விஞ்ஞானி கி லன் தலைமையிலான குழு ஒன்று, கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய, வூஹான் நகரில், இரு அரசு மருத்துவமனைகள் உட்பட 31 இடங்களில் காற்றில் உள்ள கிருமிகள் குறித்து ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கை தற்போது ஜர்னல் நேச்சர் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள மருத்துவமனைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மேற்கொண்ட ஆய்வில், காற்றில் கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு உள்ளது தெரியவந்தது. ஆனால், அவைதான் கொரோனா வைரஸ் பரவ காரணமா என்பதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது