கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. ஆனால், இதை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. வைரஸ் பரவல் குறித்து சீனாவில் சர்வதேச குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளன. மேலும், ஏற்கனவே இதைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சீனாவில் இருந்துதான் வைரஸ் பரவியுது என்று கண்டறியப்பட்டால், சீனா அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனும் சீனாவிற்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.ஆனால் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகிறோம் என்றும் கொரோனா வைரஸ் பரவலை சீனா ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம், ஆனால் தவறவிட்டனர் என கூறினார்