வரும் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் காமென் டிபியை உருவாக்கினர். இதை வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முகப்பு படமாக வைத்து கொண்டாடவும் திட்டமிட்டிருந்தனர்
இந்நிலையில் கொரோனா காலத்தில் காமென் டிபி வெளியிடுவது உள்ள கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தி அஜித்தின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக காமென் டிபியை வெளியிட இருந்த நடிகர் ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Dear #Thala Fans
Got a call from #Ajith sir’s office requesting not to hav any common DP for his bday and celebrate it during #Corona It was his personal request! As a fan and as a fellow actor & human would like to respect his words! @Thalafansml @ThalaFansClub @SureshChandraa— Aadhav Kannadhasan (@aadhavkk) April 26, 2020