மருதானை பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி தாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று (24) உறுதி செய்யப்பட்டது.
குறித்த தாயின் குழந்தை தாயின் வயிற்றுக்குள்ளேயே இறந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அந்த தாய் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிச்செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தியேயே வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தாயின் ஊடாக குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா? அவ்வாறு நடந்திருந்தால் எவ்வாறு? குழந்தை உயிரிழக்க அதுவா காரணம்? என்ற கேள்விகளுக்கு நிச்சயிக்கதக்க பதிலை வழங்க முடியாதுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் உயிரிழந்த குழந்தைக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.