பேலியாகொட மீன் விற்பனைச் சந்தை தொகுதியில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக நீர்கொழும்பு பிடிப்பான பிரதான மீன் விற்பனைச் சந்தையை நோக்கி நேற்று புதன்கிழமை (22) முதல் பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் படையெடுத்துள்ளனர்.
இந்நிலை கொரோனா தொற்று ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம் என மீனவர்கள் கருத்து தெரிவித்தனர். பொலிஸார் மீன்களை கொள்வனவு செய்ய வருவோரை சமூக இடைவெளியை பேணுமாறு வலியுறுத்திய போதும் சந்தைக்குள் சென்றதன் பின்னர் அந்த சிறிய மீன் விற்பனைச் சந்தையில் மீன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவு செய்ய வந்த பொது மக்கள் நெருக்கமாக இருப்தை காண முடிந்தது.
இதனையடுத்து நோய்த்தொற்றும் அபாயம் கூடுதலாக காணப்படுவதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததான் காரணமாக பேலியாகொட மீன் விற்பனைச் சந்தை திறக்கும் வரை நீர்கொழும்பு பிடிப்பான பிரதான மீன் விற்பனைச் சந்தையை மூடுவதற்கு தீர்மானித்திருப்பதாக
நீர்கொழும்பு மீனவ கூட்டுறவு சங்க தலைவர் ரன்ஜித் என்டணி பிரணாந்து அவர்கள் தெரிவித்தார்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா