பல நாடுகளில் கொரோனா தடுப்புக்காக அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இப்போதுள்ள சூழலில் விலக்க கூடாது என மேற்கு பசிபிக் பிராந்தியத்திற்கான உலக சுகாதார நிறுவன இயக்குநர் தகேஷி கசாய் கூறி உள்ளார். இது தளர்வுக்கான நேரம் அல்ல என்று கூறியுள்ள அவர், புதிய வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்க நாம் தயாராக இருக்க வேண்டிய தருணம் என்றும் தெரிவித்துள்ளார். தொற்றை கட்டுப்படுத்துவதில் விழிப்புடனும் ஊரடங்கு மற்றும் சமூக விலகியிருத்தலை தளர்த்துவதில் படிப்படியாகவும் அரசுகள் ஈடுபட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்