கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு காரணமாக கம்பஹா மாவட்டத்தில் கட்டானை, வெலிஹேன பிரதேசத்தில் வாழுகின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பலர் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
தினசரி தொழில் செய்து வாழும் இந்த மக்கள் தொழிலின்றி , வருமானமின்றி வாழுகின்ற வழி தெரியாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.
அவ்வாறான சூழ்நிலையில் சில குடும்பங்களை தேர்ந்தெடுத்து நீர்கொழும்பு தமிழர் இளைஞர் அணியினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா