சுகாதார தரப்பினருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (20) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ளது.