ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் செயற்படவேண்டிய முறை

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் செயற்படவேண்டிய முறை

0Shares

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன வழமையான கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பணிக்கு சமூகமளிக்க வேண்டும்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களில் ஐம்பது சதவீதமானோர் கடமைக்கு திரும்ப வேண்டும்.

ஏனையவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் என்பதோடு யாரை வேலைக்கு அழைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு நிறுவன உயரதிகாரியிடமே உள்ளது.

ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பது அந்த நிறுவன உயரதிகாரியின் பொறுப்பாகும்.

அதேபோல் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும்.

மேலும் நிறுவனங்களின் தலைவர்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்.

இதேவேளை பொது நிறுவனங்களின் இயல்பான செயல்பாட்டை முன்னெடுக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், துறைசார் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கூட்டுதாபன தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களின் பொது முகாமையாளர்களுக்காகவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேலைத்தளங்களில் கொவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பணியாளர்கள் வேலைக்கு வருவதற்கான வழிமுறையாகவும், மக்கள் கூட்டமாக ஒன்று கூடுவதை தடுக்கவும், வீட்டிலிருந்து தங்கள் கடமைகளைச் செய்யவும் நான்கு முக்கிய விடயங்களை உள்ளடக்கி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு நிறுவனங்களும் சமூக தூரம், முகம் கழுவுதல், கை கழுவுதல் மற்றும் பிற சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதேபோல் சேவை பெற வரும் பொதுமக்களின் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகளை வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து வகையான திருவிழாக்கள், யாத்திரை, சுற்றுலாக்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவை மீள அறிவிக்கும் வரை தடை செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் மக்கள் கூட்டமாக கூடுவதால் அது வைரஸ் பரவலை தடுக்க தடையாக இருக்கும் என கருதி அனைத்து மத விழாக்களுக்கும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்பதால், ஜனாதிபதியின் ஊடக பிரிவு அனைவரையும் அனைத்து சுகாதார விதிமுறைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும், பொறுப்புடன் நடக்க வேண்டும் என்றும், ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் போது பணிகளுக்காக வெளியில் செல்லுமாறும் அதனை தவிர வேறு தேவைக்காக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் முடியுமான வரை வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுள்ளது.

இதேவேளை சமூகத்தில் கொவிட் 19 வைரஸ் பரவுவது குறைவடைத்துள்ளதால் நாட்டில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறுகிறார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகும், சுகாதார அதிகாரிகள் அளித்த வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும் என சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments