நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலையில்
“அவசர சிகிச்சை பிரிவுக்கான களஞ்சியசாலை”
ஒன்றை அமைத்து கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி.
நீர்கொழும்பில் அமைந்துள்ள மாவட்ட பொது
வைத்தியசாலையில் பலவருடகால குறைபாடுகளில் ஒன்றாக காணப்பட்டுவந்த அவசர சிகிச்சை பிரிவு களஞ்சிய சாலையை வைத்தியசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, மக்கள் விடுதலை முன்னணியின் சிவப்பு நட்சத்திர நலன்புரி அமைப்பினரால் தற்போது அமைக்கப்பட்டு வருவதாக அவ் அமைப்பின் உறுப்பினரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்க செயலாளருமான மஹிந்த ஜயசிங்க அவர்கள் தெரிவித்தார்.
குறித்த களஞ்சியசாலையை அமைப்பதற்கான முழு செலவையும் தங்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும் அதற்கான நிதிகளை மக்கள் விடுதலை முன்னணியின் மந்திரிகள் சம்பள நிதியத்தில் இருந்து பெற்றுள்ளதாகவும் கட்டிட வேலைத்திட்டத்துக்கு தங்கள் அமைப்பின் உறுப்பினர்களையே பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹாக மாவட்டத்தின் மாவட்ட வைத்தியசாலையாக காணப்படும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலை மேல் மாகாண டெங்கு ஒழிப்பு வைத்தியசாலையாகவும், தற்போது கொரோன வைரஸ் தொற்று இருக்கும் என்று சந்தேகப்படும் நோயாளிகள் தனிமை படுத்தும் வைத்தியசாலையாகவும் காணப்படுகின்றது.
கட்டுநாயக்க சர்வதேச விமனநிலையத்துக்கு மிக அருகில் காணப்படும் ஒரே அரச வைத்யசாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் :ColourMedia ஊடகவியலாளர்:செல்வா