ஊரடங்கு அமூல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவரும் சட்ட விரோதமாக மதுபானம் கொண்டு சென்ற இருவரும் நீர்கொழும்பில் கைது…!
ஊரடங்கு அமூல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அரசாங்கத்த்தால் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தில் நகரமத்தியில் அமைந்துள்ள சைனீஸ் உணவகம் ஒன்றில் இன்றயதினம்(16) களவாக மதுபானம் விற்பனை செய்த வேலையில் சுற்றிவளைத்த நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் பெருமளவிலான மதுபான போத்தல்களை கைப்பபற்றியுள்ளதுடன். மது அருந்தவந்த ஒருவர் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றுI முன்தினம் இரவு நீர்கொழும்பு கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடையில் நின்ற நீர்கொழும்பு பிராந்திய போக்குவருத்து பொலிஸார் உயர்ரக வாகனம் ஒன்றை பரிசோதனைக்காக நிறுத்தியபோது பொலிசாரின்
சமிஞ்சை மீறி சென்றுள்ளது குறித்த வாகனத்தை விரட்டி சென்று பரிசோதனை செய்தபோது குறித்தவாகனத்தில் 70 மதுபான போத்தில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இருவரை கைதுசெய்துள விசாரணைக்கு உட்படுத்திய போது குறித்த வாகனம் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்றும் வாகனத்தில் VIP என்று காட்சி படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள் ஊடகவியலாளர்:செல்வா