மக்களை ஒன்று கூட்டும் வகையில் புத்தாண்டு நிகழ்வுகளை இரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை.
அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப உறவினர்களுடன் வரையறுத்துக்கொள்ளுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், கிராமப்புறங்களில் புத்தாண்டு விழாக்களை நடத்த சிலர் தயாராவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே, கிராமப்புறங்களில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.