ஒரு அணி வெற்றி பெற்றால் அதற்கு அனைவரையும் பாராட்டியும், தோல்வி வந்தால் அதற்கு கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற பல சிக்கலான சவால்களை கொண்டது தான் கேப்டன் பொறுப்பு. கிரிக்கெட்டில் இந்த கடினமான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆனால் ஐசிசி கோப்பை வெல்லாத கேப்டன்களில் சிலரைப் பார்க்கலாம்
விராட் கோலி:
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி. இவரின் தலைமையில் இந்திய அணி 89 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற 62 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவரின் வெற்றி சதவீதம் 71.82 ஆக உள்ளது. கோலி தலைமையில் 2017 இல் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 உலகக்கோப்பை தொடரில் களமிறங்கியது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது. 2019 இல் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது.
AB de Villiers (ஏபி டி வில்லியர்ஸ்)
இவரின் தலைமையில் தென் ஆப்ரிக்க அணி 103 போட்டிகளில் பங்கேற்று 59 இல் வெற்றி பெற்றுள்ளது. இவரின் வெற்றி சராசரி 60.10 ஆக உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட சிறப்பான வெற்றி சதவீதம் இருந்த போதும் ஐசிசி தொடர்களில் தென் ஆப்ரிக்க அணி இவரின் தலைமையில் சாதிக்கவில்லை. டிவிலியர்ஸ் தலைமையில் தென் ஆப்ரிக்க அணி கடந்த 2015 இல் நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
மஹேல ஜயவர்தன
இவரது தலைமையில் இலங்கை அணி 129 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 71 போட்டிகளில் வென்றுள்ளது. இவரது தலைமையில் 2007 இல் நடந்த உலகக்கோப்பை தொடரின் ஃபைனலுக்கு இலங்கை அணி முன்னேறியது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. மேலும் டி-20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஜெயவர்தனா தலைமையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.