அமெரிக்காவில் கொரோனாவால் 5 லட்சத்தி 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டனர்.
நியூயோர்க்கில் மட்டுமே ஒரு லட்சத்தி 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூ ஜெர்சியில் 55 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சன்ஸ்டேட் மாகாணம் என அழைக்கப்படும் புளோரிடாவில் 17 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா கொரோனாவை தடுக்க முடியாமல் தினறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக புளோரிடா மாகாண மக்களுக்கு! கொரோனாவை விட மோசமான ஒன்று எதிர்வரும் June மாதம் வரபோகிறது. அதுதான் அட்லாண்டிக்கில் ஏற்படவுள்ள புயல் பருவ காலம் குறித்து நிபுணர்கள் கூறுகையில் கொரோனா மோசமானது என்றால் புயல் அதை விட மிகவும் மோசமானது.
கொரோனா காலத்தில் புயலும் சேர்ந்து வருவது அதன் பாதிப்பு இரண்டைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். அதுவும் பன்மடங்கு பெருகும். இந்த பருவ காலப்பகுதியில் June மாதத்தில் தொடங்கும். இதனால் பொருளாதார ரீதியிலும் சரிவு ஏற்படும். புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனர்.
கொலோராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கையில்:-
வழக்கமான புயல் பருவத்தை விட இந்த வருடம் பாதிப்புகளும் வீரியமும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. June மாதம் முதல் November மாதம் வரை 4 முக்கிய புயல்கள் ஏற்படும். அப்போது மணிக்கு 110 மைல்கள் வேகத்தில் காற்று வீசக் கூடும். இந்த நேரத்தில் பாதிக்கப்படும் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றி பஸ்களில் பொது இடங்களில் தங்க வைப்பது வழக்கம்.
ஆனால் இப்போது கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மக்களை எப்படி கும்பம் கும்பமாக தங்க வைப்பது என்பது குறித்த யோசனையில் அனர்த்த முகாமைத்துவ குழுவுள்ளது. இது போன்ற சிக்கலான நேரத்தில் எப்படி சமூக விலகலை கடைப்பிடிப்பது? பாதிக்கப்படும் மக்கள் உறவினர்களை கூட வீடுகளில் தங்க வைத்துக் கொள்ளமாட்டார்கள். என்ன செய்வது என தெரியாமல் புளோரிடா மாநில நிர்வாகம் யோசனையில் உள்ளது.
எம்.ஜே.எம் பாரிஸ்