நாட்டில் நிலவும் அசௌகரிய சூழ்நிலை காரணமாக நாட்டு மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதை நாம் கண்ணூடே கண்டுகொண்டிருக்கின்றோம்.
அனைத்து வளங்களும் பெற்ற எம் இலங்கைத் திரு நாட்டில் ஒருபிடி அரிசிக்கும் ஒரு வாய் சோற்றிற்கும் நம் மக்கள் அல்லலுரும் காட்சி கண்களிலிருந்து வடிகின்ற கண்ணீருக்கு சான்றாகவே அமைகின்றது.
வளம் பெற்ற நம் தேசத்தில் நல்லுள்ளம் படைத்தவர்களின் சில சேவைகளுக்கு நன்றி கூறும் முகமாகவே colour media இப்பதிவினை பதிவேற்றுகின்றது.
ஆம், நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் மன்றத்திற்கும் , Rajeewan Memorial Foundation மற்றும் SIGARAM க்கும் அவர்களின் சேவையினை பாராட்டி நன்றி கூறுவதில் பெறுமையடைகின்றது Colour Media Team .
நாட்டின் நிலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அறிந்தும் தம் உயிர்களையயும் கருத்திற்கொள்ளாது, நாட்டு மக்களின் பசி தீர்க்கும் இவ் நல்லுள்ளங்களுக்கு இறைவன் துணை நிற்க வேண்டுகிறோம்.
மேலும் நாட்டில் இது போன்ற நற் சேவைகளை முன்னெடுக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எம் வாழ்த்துக்களைப் பதிவிடுவதோடு, இப் பதிவை எம்கடமையாகவே கருதுகின்றோம்.
COLOUR MEDIA NETWORK
ஒன்றினைவோம் மீட்டெடுப்போம்….
வாழ்க நம் மக்கள் வளர்க நம் தேசம்….