டோக்கியோ 2020 ஒலிம்பக் விளையாட்டு விழாவுக்கான பளுதூக்கல் போட்டிகளில் பங்குபற்ற தாய்லாந்துக்கும் மலேஷியாவுக்கும் உதியோகபூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளினதும் வீரர்கள் பல சந்தர்ப்பங்களில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்ட குற்றங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன உறுப்பு சம்மேளனங்களின் தீர்ப்பாயக் குழு தெரிவித்தது.
இது இவ்வாறிருக்க, சர்வதேச பளுதூக்கல் சங்கத்தின் உறுப்புரிமையிலிருந்து தாய்லாந்து அமெச்சூர் பளுதுஷக்கல் சங்கத்துக்கும் மலேஷிய பளுதூக்கல் சங்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து சம்மேளனத்துக்கு 3 வருடத் தடையும் மலேஷிய சம்மேளனத்துக்கு ஒரு வருடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.