கோவிட் -19 நெருக்கடியில் இலங்கையும் சிக்கி திணறி வரும் நிலையில் இந்தியா இன்றையதினம் 10 தொ ன் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கை அரசு விடுத்த கோரிக்கைக்கு அமையவே ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் இந்த மருந்துப் பொருட்கள் இன்று 7 ம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.