மனித குல நாகரீகத்தின் அதி வீரிய வளர்ச்சியின் விளைவால், இயற்கை தன் நிலை மறந்து தன் அழகையும் இழந்தது. இவ் விளைவால் உலகின் நிலையும் சிறிதே மாற்றம் பெற்றது என்பதற்கு சான்று பகர்க்கும் வகையில் உலகின் பல ஆறுகள், குளங்கள், புல்வெளிகள், நதிகள், காடுகள் மற்றும் மலைத்தொடர்கள் தன் நிலை இழந்து காட்சியளிப்பதற்கு நாமே சாட்சி.
எம் மூதாதயர்களின் வாழ்வை செழிப்புற வைத்த பல ஆற்றுப் படுக்கைகளில் தவழ்ந்த நதிகள் இன்று தன் உயிர் பிரிந்து தன்நிலை இழந்ததேனோ?
கண்களுக்கு விருந்தாய் பரந்து விரிந்து நின்ற மலைகளும் காடுகளும் இன்று நம் கண்களில் இருந்து மறைந்ததன் மர்மம் என்னவோ?
இன்று உலகே “கொரோனா” என்னும் கோரப்பிடியில் சிக்குண்டு அவதியில் மனித குலமே சீர்குழையும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், இயற்கை மீண்டும் தன் அழகுடன் பிரகாசிக்கும் காட்சிகள் கண்களுக்கும் மனதிற்கும் விருந்தே என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இவ் இயற்கை அழகிற்குச் சான்று பகர்க்கவே தன் அழகை இவ்வுலகிற்கு காட்டி நிற்கின்றது “இமாலயா” என்னும் இமயமலையின் சிகரங்கள்.
வானைத் தொடும் உயரமும் உலகின் மொத்த வெண்பூக்களையூம் தன்னகத்தே சூடியதைப் போல வெண்பனி மலைச் சிகரங்கள் கண்கள் கண்டிராத மெய் சிலிர்க்க வைக்கும் தன் அழகை இத்தனை ஆண்டுகளாக மறைத்ததன் காரணம் மானிடன் தானோ?
இன்று உலகில் மனித குலத்தைக் காணாத இன்பத்தின் உச்சமாய் உன் அழகு,
வெண்பனி பூத்து வெள்ளைப்பட்டாடை அணிந்ததைப் போல் வெண்ணிறமாய் உன் அழகை இவ் உலகிற்குப் பறைசாற்றுகின்றாயோ?
உன் அழகை கண்களால் கண்டு வியந்தவர்கள் தங்கள் கைகளால் பதிவு செய்த காட்சிகளே இங்கு படமாக பதியப்பட்டுள்ளது.