இலங்கையில் தற்போது கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 162. என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க COVID 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று உறுதி செய்தார்.
நேற்றை தினம் (2020.04.03) அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் கொரோனா வைரசு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 11
இறுதியாக அடையாளங்காணப்பட்ட 11 நோயாளர்களுள் மூவர் யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் அடையாளங் காணப்பட்டார்கள்.
இதேபோன்று அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படிருந்த போது அடையாளங்காணப்பட்ட இருவரும்; இதில் அடங்குகின்றனர் என்றும் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்;