கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவர் அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் 23 வயதுடைய யுவதி ஒருவர் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அநுராதபுரம், ஹிதோகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றி வருபவர் எனவும் தெரியவருகின்றது.
கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து குறித்த யுவதி அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவர் அங்கொடையில் அமைந்துள்ள ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.