தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை இடம் பெற்றுள்ளது.
உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு முயற்சியில் இந்த ஆண்டு இலங்கைக்கு பசுமை தரவரிசை கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மதிப்பீட்டின் படி இலங்கை 100க்கு 91 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுக்க தாய்மார்களை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு இலங்கை பாராட்டப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு குறித்த ஆய்வு 120 நாடுகளில் நடத்தப்பட்டது.
இதன்படி, நாடுகள் 10 அளவுகோல்களில் தீர்மானிக்கப்படுகின்றன, பின்னர் வண்ண குறியீட்டு புள்ளிகள் அமைப்பு மூலம் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
அதன்படி, சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை என நாடுகள் ஏறுவரிசையில் பிரிக்கப்படுகின்றன.
தாய்ப்பாலை முறையாக வழங்குவதால் குழந்தை மற்றும் தாய்வழி ஆரோக்கியத்தைத் தடுக்க முடிவதோடு, மேலும் தொற்றுநோய்களையும் தடுக்க முடியுமென மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.