சமூக வலைத்தளங்களின் ஊடாக, இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட, மூன்று இலங்கையர்களுக்கு எதிரான வழக்கில் டுபாய் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி அங்குள்ள சுற்றுலா வீடுதி ஒன்றில் பாதுகாப்பு கடமைகளில் சேவை புரிந்த குறித்த மூவருக்கும் தலா 5 இலட்;சம் திர்ஹாம் அபராத தொகையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவில் ஒருவருக்கு தலா இரண்டரை கோடி ரூபாவுக்கும் அதிகமான அபராத தொகையினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பேஸ்புக் மற்றும்இ இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களின் ஊடாக இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தகவல்களை பறிமாறியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அது தொடர்பில் டுபாய் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த மூன்று இலங்கையர்களும் தமது தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டுபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.