பெறுமதிசேர் (வெட்) வரி குறைப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைய வெட் வரி திருத்தத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதியளித்த நிலையில் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறை படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.