மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெஹரஹர காரியாலயத்திற்கு சேவைக்காக வரும் மக்களிடம் சேவையை விரைவாக பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் பெறும் இடைத்தரகர்கள் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.