நாட்டின் தேசிய கீதம் ஒரு மொழியில் மாத்திரமே பாடப்பட வேண்டும் என்று மல்வத்து மஹாபீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்ரே விமரதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு சிறிய நாடு என்ற அடிப்படையில் வௌ;வேறு மொழிகளில் தேசிய கீதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பலவகையான மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில் கூட ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இருக்கிறது.
வெவ்வேறு மொழிகளில் தேசிய கீதம் இடம்பெறும் போது, நாட்டின் தேசியம் குறித்து மக்கள் மத்தியில் பிளவுகள் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.