2020ம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் 4ம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வில், சிங்கள மொழியிலான தேசிய கீதம் மாத்திரமே பாடப்படும் என்று, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கின்ற போதும், ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம் உள்ளது.
அதேபோன்று, இலங்கையிலும் ஒருமொழியில் மாத்திர தேசிய கீதம் பாடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த கூற்றுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மனோகணேசன், இதுகுறித்த தாம் ஜனாதிபதிக்கு வலியுறுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.