முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று நண்பகல் 2 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ரொயிஸ் விஜித்த பெர்ணான்டோ, ஐக்கிய தேசியக் கட்சியின் சிலாபம் அமைப்பாளரும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த அபேசேகர ஆகியோரை பார்வையிட்டார்.
இதன் போது ஊடகங்களுக்கும் ரவி கருணாநாயக்க அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்.
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தான் சிறந்தது என்றும் கருத்து தெரிவித்தார்.
காணொளி