பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் அடுத்த வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் எதிர்வரும் வாரத்துடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து டிசம்பர் எட்டாம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த நிலையில், பாடசாலை மாணவ, மாணவியருக்கான இலவச சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் வாரம் வழங்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான வவுச்சர்கள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
நாடு முழுவதும் இயங்கும் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் நாற்பது இலட்சம் மாணவ, மாணவியரின் சீருடைகளுக்காக அரசு 2370 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
அதேவேளை, தனியார் பாடசாலை மாணவ, மாணவியரின் சீருடை தேவைக்காக 75 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.