செய்தி -லேக்கவுஸ்
உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஸஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனவும் அது தொடர்பாக அவரது வீட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர். காத்தான்குடி முதலாம் குறிச்சி நூர்முகம்மட் லேனைச் சேர்ந்த செயினுலாப்தீன் முகம்மட் ஜெஸீல் என்ற 18 வயதான நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 21.4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து ஸஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர் எனும் சந்தேகத்தில் இவரும் இவரது சகோதரரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.