பாடசாலை மாணவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதை இயன்றளவு கட்டுப்படுத்த வேண்டும் என காலி கராப்பிட்டி மருத்துவமனையின் உளவியல் மருத்துவ நிபுணர் ரூம் ரூபன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சந்ததியினர் கைத்தொலைபேசி ஊடாக இணையதளத்தை பயன்படுத்துவதற்கு பழக்கப்பட்டுள்ளனர்.
தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும், நண்பர்களுடன் உரையாடுவதற்கும், கற்றல் மற்றும் விநோத நடவடிக்கை என அனைத்து செயற்பாடுகளுக்கும் சமூக வலைதளங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், சிறுவர்கள் சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தையும், செயற்படும் முறையையும் கட்டுப்படுத்தாவிட்டால் சிக்கல் நிலை ஏற்படும் என காலி கராப்பிட்டி மருத்துவமனையின் உளவியல் மருத்துவ நிபுணர் ரூம் ரூபன் தெரிவித்துள்ளார்.
இயற்கையான சமூக சூழலில் நண்பர்களுடன் நட்புகொள்வது குறைவடைந்து, இணையதளத்தில் மூழ்குவதும் சிக்கலுக்குரிய நிலைமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளம் மூலம் காண்பிக்கப்படும் உலகத்தை புரிந்துகொள்ளக்கூடிய தன்மை சிறுவர்களுக்கு இல்லை.
சமூக வலைதளங்கள் மூலம் சிறுவர்களை இலக்கு வைத்திருப்பவர்களின் அச்சுறுத்தல் தொடர்பில் அவர்கள் அறிந்திருப்பதில்லை.
எனவே, கட்டுப்பாடுகளின்றி சமூக வலைதளங்களை பயன்படுத்த இடமளிப்பது பொதுத்தமானதல்ல.
இதற்கமைய, கல்வி பொதுத் தராதர உயர் தரத்திற்கு குறைந்த தரங்களில் கல்வி கற்றும் மாணவர்களை சமூக வலைதளங்களை பயன்படுத்த இடமளிப்பது பொறுத்தமற்றது என்பதை தெளிவாக குறிப்பிட முடியும் என காலி கராப்பிட்டி மருத்துவமனையின் உளவியல் மருத்துவ நிபுணர் ரூம் ரூபன் தெரிவித்துள்ளார்.