இணையத்தின் கூகுள் தேடு பொறியின் ஊடாக அமெரிக்கர்களால் அதிகம் தேடப்பட்ட இடங்களில் இலங்கை முதலிடம் வகிக்கிறது.
2019 ஆம் ஆண்டுக்கான கூகுள் தேடல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிகளவானோர் விரும்பப்படும் நாடாகவும் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலக சுற்றுலா சஞ்சிகையும் இந்த ஆண்டில் தமது முதல் பக்கத்தில் இலங்கை தொடர்பான விபரங்களை வெளியிட்டிருந்த நிலையில், அது தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு அமெரிக்கர்கள் பலர் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களின் போதும் இலங்கை தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.
இவ்வாறான காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை, அமெரிக்கர்களில் 87 வீதமானவர்கள் இணையத்தள பாவணையாளர்களாக இருக்கின்ற நிலையில், அவர்களில் 97 வீதமானவர்கள் கூகுள் தேடுபொறியினை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.