இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதரி இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
ஜனாதிபதி அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த தூதுவர், இருநாடுகளுக்கிடையிலும் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினார்.