பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர், போதைப்போருள் மற்றும் கைத்துப்பாக்கி என்பனவற்றுடன் ரத்கம பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகத்துக்குரியவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளும், ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.