(கஸ்தூரி )
அண்மைக்காலமாக சுகாதார துறையில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அத்தியாவசியமான 24 வகை மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதியமைச்சினால் ரூபாய் 1000 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
மேலும் கடந்த 5ம் திகதியன்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார, சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்களும் சுகாதார செயலாளர் பீ.எம்.எஸ் சார்ல்ஸ் அவர்களும் நிதி செயலாளருடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாகவே இந்த பணத்தொகையை பெற்றுக்கொள்ள முடிந்தது என்றும் தெரிவித்தார்.
இதன்படி ஒரு மாத காலத்திற்குள் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்து மகாரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு கொடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும், பல்வேறு மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் கடன்கடிதங்களின் (LC) மூலம் அத்தியாவசியமான மருந்துகளின் பற்றாக்குறையை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.