கொழும்பு நகருக்குள் தனியார் வாகனங்கள் பிரவேசிப்பதில் கட்டுப்பாட்டை விதிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
கொழும்பு நகர எல்லைக்குள் பிரவேசிக்கின்ற தனியார் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நகருக்குள் வாகனங்களை கட்டுப்படுத்தும் முகமாக, இந்த புதிய கட்டுப்பாட்டை விதிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்ற வாகனங்களை வகைப்படுத்தி, அவற்றின் வகையின் அடிப்படையில் கட்டணத்தை அறவிடுவது குறித்தும் ஆலொசிக்கப்படடு வருகிறது.
அதேநேரம், வாகன நெரிசலை முறையாக முகாமை செய்யும் வகையில் பொதுமக்களுக்கு வினைத்திறனான பொதுப்போக்குவரத்து சேவையை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, பொதுப் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.