தனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை அறிமுகப்படுத்தப்படுமென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பது இதன் நோக்கமாகும். அரைசொகுசு பஸ் சேவைகள் பயணிகளுக்கு உரிய சேவையை வழங்காவிட்டால் அவற்றை சேவையில் இருந்து நீக்குவதற்கும் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பஸ் சேவைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் தமக்கு முறையிட்டதாகவும் எதிர்வரும் காலத்தில் பொதுமக்களுக்கு அதிக வசதிகளை வழங்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.