ஊவ – வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை உளவியல் ரீதியில் இம்சைக்கு உட்படுத்தி ,பகிடிவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்படடுள்ள பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு 10 மாணவர்களையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். பகிடிவதைக்கு உட்பட்ட மாணவர்கள் சிலர் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாகவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.