பல எதிர்ப்புகளை அடுத்து அமெரிக்க MCC உடன்படிக்கை 16/11/2019 கைச்சாத்திடாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம்: உடுதும்பர கஷயபா தேரரால் முன்னெடுக்கபட்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது..
ஏப்-11ம் திகதி சகல பொலிஸ் வலயங்களுக்கும் அனுப்பப்பட்ட ஷஹ்ரான் தொடர்பான உளவுத் தகவலில் குறிப்பிட்ட தங்குமிடங்கள், வாடகை வீடுகளை சோதனையிட ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அது உரிய முறையில் செய்யப்பட்டதா என்பதில் சிக்கல் உள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெறும் வரை இஸ்லாமிய கடும்போக்குவாதம் தொடர்பில் பொலிஸாருக்கு உரிய அறிவு இருக்கவில்லை – முன்னாள் கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வது உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலக முன்றலில் போராட்டத்தை ஆரம்பித்தார் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வரும் முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும்போது புர்க்கா மற்றும் நிக்காப் அணிந்து வந்தாலும் ,வாக்களிப்பு நிலையங்களுக்குள் அவர்கள் முகத்தை மறைக்கும் வகையிலான அவற்றை அணிந்திருக்க முடியாதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
பாராளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸாநாயக்கவின் வாகனத்தை வழிமறித்த ஒரு குழுவினர் மீது அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் காயமடைந்தனர்.
கினிகத்தேனை பொல்பிட்டி பகுதியில் இன்றிரவு நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்