இந்து பௌத்த கலாசார பேரவை என்ற அமைப்பினால் 2ஆம் மொழி கற்கை நிலையம் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இந்தக் கற்கை நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்து பௌத்த கலாசார பேரவையின் வடமாகாண தலைமைக் காரியாலயமாக இந்த நிலையம் அமையும் என்பதுடன், எதிர்வரும் காலத்தில் வடக்கின் ஏணைய மாவட்டங்களில் அதன் கிளைகள் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையத்தில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிக் கற்கைகளை மாணவர்கள் இலவசமாக கற்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.